Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 580)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

ஜநயஸி பதாவநி த்வம் முக்தா சோண மணி சக்ர நீலருசா நகருசி ஸந்ததி ருசிராம் நந்தக நிஸ்த்ரிம்ச ஸம்பதம் சௌரே:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது முத்துக்களின் ஒளி, பத்மராகக் கற்களின் ஒளி மற்றும் இந்த்ரநீலக் கற்களின் ஒளி ஆகியவை ஸ்ரீரங்கநாதனின் திருவடியின் நகங்களில் புதிய ஒளியை ஏற்படுத்துகின்றன. இதனைக் காணும்போது நீ அவனுடைய நந்தகம் என்னும் கத்தியின் தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.