Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 579)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
ஸதா உத்துங்கே ரங்கக்ஷிதி ரமண பாத ப்ரணயிநி த்வத் ஆலோகே தத்தந் மணிகிரண ஸம்பேத கலுஷே ப்ரதி ஸரோதோ வ்ருத்த்யா ப்ரதித ருசி பேதம் ந ஸஹதே நவாம்ப: ஸ்வாச்சந்த்யம் நமதமர கோடீர மகர:
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் மாறாத ஆசையுள்ள பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை வந்து வணங்கும் தேவர்களின் க்ரீடங்களில் அழகான மீன் வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த மீன்களின் நிலை என்ன என்றால் – உன்னில் பதிக்கப்பட்ட அந்தந்த இரத்தினக் கற்களின் உயர்ந்த ஒளியானது ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, கலங்கிய ஒளி வெள்ளமாக நிற்கின்றன; இவற்றின் எதிரே மீன்களின் ஒளியானது சற்று தணிந்தே உள்ளது. இதனை காணும்போது மீன்கள் பாதுகையில் இருந்து எழும் ஒளி வெள்ளத்தை எதிர்த்துச் செல்லத் தடுமாறியபடி மெதுவாகச் செல்வதாகத் தோன்றுகிறது.