Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 578)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

மரதக பத்ரளா ருசிர வித்ரும பல்லவிதா ப்ருதுதர மௌக்திக ஸ்தபகிதா நிகமை: ஸுரபி: உபவந தேவதேவ சரணாவநி ரங்கபதே : அபிலஷதோ விஹாரம் அபிகம்ய பதம் ஸ்ப்ருசஸி

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மரகதக்கற்களின் ஒளியானது இலைகள் போன்றும், அழகான பவழங்களின் ஒளியானது தளிர்கள் போன்றும், முத்துக்களின் ஒளியானது வெண்மையான மலர்கள் போன்றும் உள்ளன. இப்படியாக நீ உத்யான தேவதை (உலகில் உள்ள பூமி, காடு, மலை போன்றவற்றின் அபிமான தேவதை) போன்று உள்ளாய். வேதங்களும் உன்னிடம் விரும்பி வந்து வசிப்பதால், அவற்றின் நறுமணமும் நீ கொண்டுள்ளாய். உல்லாஸமாகச் ஸஞ்சாரம் செய்ய விரும்பும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை நீ தொடுகிறாய்.