Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 577)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

கலயாபி ஹாநிரஹிதேஷு ஸதா தவ மௌக்தீகேஷு பரித: ப்ரத்தே உபரஜ்யமாந ஹரிணாங்க துலா ஹரிபாதுகே ஹரிசில மஹஸா

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்கள் எப்போதும் சந்திரன் போன்று தேயாமல் உள்ளன. ஆனாலும் அனைத்துப் பக்கங்களிலும் அவை இந்திரநீலக் கற்களால் சூழப்பட்டதால், க்ரஹண காலத்துச் சந்த்ரர்கள் போன்று உள்ளன (அதாவது நீலக்கற்களால் முத்துக்கள் சற்றே இருண்டு உள்ளன என்றார்).