Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 576)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

ப்ரதிசதி முதம் அக்ஷ்ணோ: பாதுகே தேஹ பாஜாம் சதமகமணி பங்க்தி: சார்ங்கிண: துல்யவர்ணா பரிஸர நிஹிதை: தே பத்மராக ப்ரதீபை: கநதர பரிணத்தா கஜ்ஜல ச்யாமிகேவ

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருமேனி நிறத்திற்குச் சமமான நிறம் கொண்ட இந்த்ரநீலக் கற்களின் அருகே சிவந்த பத்மராகக் கற்களும் உள்ளன. இவற்றைக் காணும்போது தீபங்கள் போன்று உள்ளன. ஆனால் அவற்றின் இடையே உள்ள நீலக்கற்கள் சற்றே கருமையை ஏற்படுத்துவதால், அந்த தீபங்களின் ஒளி மக்களின் கண்களை உறுத்தாமல் ஆனந்தம் அளிக்கிறது.