Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 575)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

ஸகலம் இதம் அவந்த்யே சாஸநே ஸ்தாபயந்தீ முரமதந பதஸ்தா மௌக்திகாதி ப்ரகாரா ப்ரகடயஸி விசுத்த ச்யாம ரக்தாநி ரூபாந் பல பரிணதி பேதாந் ப்ராணிநாம் பாதுகே த்வம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இந்த உலகங்கள் அனைத்தையும், தவறாமல் இருக்கின்றதான ஸ்ரீரங்கநாதனின் கட்டளைக்கு ஏற்ப நீ நிலை நிறுத்துகிறாய்; அவனுடைய திருவடிகளில் எப்போதும் அமர்ந்துள்ளாய்; முத்து முதலான பலவிதமான இரத்தினங்களுடன் காணப்படுகிறாய்; வெண்மை, கருப்பு, சிவப்பு ஆகிய பல வர்ணங்களை வெளிப்படுத்தும் நீ, மனிதர்களின் அந்தந்த நிறமுள்ள பலன்களை அளிக்கிறாய் போலும்.

பொதுவாக புண்ய பலன்கள் வெண்மை என்றும், பாவ பலன்கள் கருப்பு என்றும், மத்யம பலன்கள் சிவப்பு என்றும் கூறுவது வழக்கம் ஆகும்.