Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 574)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

விவிதமணி ஸமுத்தை: வ்யக்தம் ஆபாதயந்தீம் திவஸ ரஜநி ஸந்த்யா யௌகபத்யம் மயூகை: உபநிஷத் உபகீதாம் பாதுகே ரங்கிண: த்வாம் அகடித கட நார்ஹம் சக்திம் ஆலோசயாம:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் இருக்கின்ற பலவிதமான இரத்தினக்கற்களின் ஒளி காரணமாக, பகல்-இரவு-ஸந்த்யாகாலம் ஆகிய மூன்று காலங்களும் ஒரே நேரத்தில் தோன்றுவது போன்று தோற்றம் அளிக்கிறது. இப்படிப்பட்ட நிலையைக் காணும்போது - மற்ற யாராலும் செய்ய இயலாதவற்றையும் செய்யும் திறன், மற்றவர்களால் சேர்க்க இயலாதவற்றைச் சேர்க்கும் திறன் ஆகியவை ஸ்ரீரங்கநாதனுக்கு மட்டுமே உள்ளது என்று உபநிஷத்துக்கள் கூறுவதற்கு ஏற்ப உள்ள ஸ்ரீரங்கநாதனின் சக்தியே இதற்குக் காரணம் என்றாகிறது.