Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 573)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
பஹு மணி ருசிர அங்கீம் ரங்கநாதஸ்ய பாதாத் நிஜசிரஸி கிரீசோ நிக்ஷிபந் பாதுகே த்வாம் ஸ்மரதி லளிதம் அந்த: லாளநீயம் பாவாந்யா: தரள கந கலாபம் ஷண்முகஸ்ய ஔபவாஹ்யம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பல நிறங்களுடன் கூடிய அழகான உருவத்துடன் உள்ள உன்னை, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் இருந்து எடுத்து, சிவன் தனது தலையில் வைத்துக் கொள்கிறான். அப்போது – பார்வதியால் கொண்டாடப்படுவனும், அசைகின்றதும், அடர்த்தியானதும் ஆகிய தோகையைக் கொண்ட மயிலை வாகனமாக உடையவனும் ஆகிய தனது புத்திரனாகிய முருகனின் நினைவு சிவனுக்கு உண்டாகிறது.
பாதுகையின் பலவிதமான நிறங்கள் மயில் தோகை போன்று உள்ளது. இதனைக் கண்டதும் சிவனுக்குத் தனது புத்திரனின் வாகனமாக மயில் உள்ளதால், அந்தப் புத்திரனின் ஞாபகம் உண்டாகிறது.