Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 572)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

மரதக ருசி பத்ரா மௌக்திக ஸ்மேர புஷ்பா ஸ்புட கிஸலய சோபா பாஸுரை: பத்மராகை: பலம் அகிலம் உதாரா ரங்கநாதஸ்ய பாதே கலயஸி பவதீ ந: கல்பவல்லீவ காசித்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மரகதங்களின் பச்சை நிற ஒளியானது இலைகள் போன்றும், முத்துக்கள் அனைத்தும் துளிர்கள் போன்றும் உள்ளன. இப்படியாக உள்ள நீ எப்படி இருக்கிறாய் என்றால் - ஸ்ரீரங்கநாதன் என்னும் கற்பக மரத்தின் திருவடிகளில் சுற்றிக் கொண்டிருக்கும் கற்பகக்கொடி போன்று உள்ளாய். இதனால்தான் எங்களுக்கு அனைத்துவிதமான பலன்களையும் நீ அளிக்கிறாய் போலும்.