Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 571)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
சரண கமல ஸேவா ஸங்கிநாம் ரங்கபர்த்து: விநயகரிம பாஜாம் வர்ஜிதை: ஆதபத்ரை: புநரபி பதரக்ஷே புஷ்யஸி த்வம் ஸுராணாம் பஹுவித மணி காந்த்யா பர்ஹி பிஞ்சாதபத்ரம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மீது மிகுந்த ஆடை உள்ளவர்களாக இருக்கும் தேவர்கள், தங்கள் வணக்கம் காரணமாகத் தங்கள் பதவிகளை உணர்த்துவதாக உள்ள குடைகளைத் தள்ளி வைத்து விட்டு, உன் முன்பாக நிற்கின்றனர். உன்னுடைய இரத்தினக்கற்களின் பலவிதமான ஒளியால் அவர்களுக்கு மயில்தோகை போன்ற வர்ணங்களுடன் கூடிய குடையை மீண்டும் நீ அமைக்கிறாய்.