Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 570)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

விவித மணிமயூகை: வ்யக்த பக்ஷாம் விசித்ரை: ஜலநிதி துஹிது: த்வாம் வேத்மி லீலா சகோரீம் அநிசம் அவிகலாநாம் பாதுகே ரங்கபர்த்து: சரண நக மணீநாம் சந்த்ரிகாம் ஆபிபந்தீம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடைய நகக்கண்கள் எப்போதும் தேயாத நிலவு போன்று, பூர்ணமான முத்துக்களாக உள்ளன. உன்னில் உள்ள பலவிதமான இரத்தினங்களின் ஒளிகளானவை உனக்கு இருபுறத்திலும் சிறகுகள் போன்று உள்ளன. ஆக மேலே கூறப்பட்ட நிலவைப் பருகுகின்றதும், ஸ்ரீரங்கநாச்சியாரின் விளையாட்டுப் பொருளாக உள்ளதும் ஆகிய சகோரபக்ஷியாகவே நீ உள்ளாய்.