Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 569)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

விரசித ஸுரஸிந்தோ: விஷ்ணு பாதாரவிந்தாத் ஸமதிகம் அநுபாவம் பாதுகே தர்சயந்தீ வலபிதுபல முக்தா பத்மராக ப்ரகாசை: பரிணமயஸி நூநம் ப்ராப்த சோணம் ப்ரயாகம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள், முத்துக்கள், பத்மராகம் ஆகியவையின் ஒளி மூலமாக கருப்பான யமுனை, வெண்மையான கங்கை மற்றும் சிவந்த சோணம் என்னும் நதிகளை நீ உண்டாக்குகிறாய். ஆகவே கங்கை என்னும் ஒரே ஒரு நதியை மட்டுமே உண்டாக்கிய ஸ்ரீரங்கநாதனின் திருவடியைக் காட்டிலும், மூன்று நதிகளை உண்டாக்கியதால் அதிகமான பெருமை உனக்கு உண்டு எனக் காண்பிக்கிறாய்.