Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 568)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

மரதக ஹரித அங்கீ மேதுரா பத்மராகை: அபிநவ ஜலபிந்து வ்யக்த முக்தாபலச்ரீ: கலயஸி பதரக்ஷே க்ருஷ்ண மேகப்ரசாராத் கநகஸரித அநூபே சாத்வலம் ஸேந்த்ரகோபம்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மரகத இரத்தினங்களால் பச்சையான திருமேனி கொண்டவளாகவும், பத்மராகக் கற்களால் பருத்தவளாகவும், புதிதாகத் தோன்றும் நீர்த்துளிகள் போன்ற ப்ரகாசத்துடன் கூடிய முத்துகளின் அழகை உடையவளாகவும் நீ இருக்கிறாய். இப்படியாக உன்னைப் பார்த்தால் எப்படி உள்ளது என்றால் – நம்பெருமான் என்னும் மேகத்தினுடைய ஸஞ்சாரத்தின்போது, காவேரியின் சதுப்பு நிலத்தில், இந்த்ரகோபம் என்னும் பூச்சிகள் நிறைந்த புல் தரையை உண்டாக்கியது போன்று உள்ளாய்.

மழைக்கால மேகம் கூடும்போது, உலகில் பசுமையான புல் அதிகமாகத் தோன்றி, அவற்றில் சிவந்த நிறம் கொண்ட இந்த்ரகோபம் என்னும் பூச்சிகள் அமர்ந்திருக்கும். பாதுகையில் உள்ள மரகதங்கள் புல் போன்றும், பத்மராகங்கள் இந்திரகோபம் என்றும் வர்ணிக்கப்பட்டன. இவற்றைக் கூட்டும் மழைக்கால மேகமாக நம்பெருமாள் கூறப்பட்டான்.