Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 567)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
நிர்கச்சதா சரண ரக்ஷிணி நீயமாநா ரங்கேச்வரேண பவதீ ரணதீக்ஷிதேந ஸூதே ஸுராரி ஸுபடீ நயந அம்புஜாநாம் ஜ்யௌத்ஸ்நீம் நிசாம் இவ ஸித ஆஸித ரத்நபாஸா
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! யுத்தம் செய்யும் உறுதியுடன் ஸ்ரீரங்கநாதன் புறப்படும்போது நீயும் அவனுடன் செல்கிறாய். உன்னுடைய வெளுப்பு, கருப்பு ஆகிய இரத்தினங்களின் ஒளி மூலமாக, அசுரர்களுடைய மனைவிமார்களின் தாமரை போன்ற கண்களுக்கு நிலவுடன் சூழ்ந்த இரவுப்பொழுதை உண்டாக்குகிறாய்.
தங்கள் கணவன்மார்களுடன் யுத்தம் செய்ய வந்துள்ள ரத்ன பாதுகையில் நிற்கும் ஸ்ரீரங்கநாதனை அசுரர்களின் மனைவிமார்கள் பார்க்கின்றனர். தங்கள் மனதில், ”என்ன நடக்குமோ”, என்று அச்சம் கொண்டு கண்களை மூடிக்கொள்கின்றனர். இரவு மற்றும் சந்திரனைக் கண்டவுடன் தாமரைகள் மூடிக்கொள்ளும் அல்லவா? இதனை இங்கு தாமரை போன்ற கண்கள் மூடுகின்றன என்கிறார்.