Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 566)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
சங்கே பதாவநி ஸதா பரிசிந்வதீ த்வம் ரங்கேசிது: சரணபங்கஜ ஸௌகுமார்யம் அக்ரே மஹோபி: அருணோபல மௌக்திகாநாம் ப்ராஜ்யாம் விநிக்ஷிபஸி பல்லவ புஷ்பபங்க்திம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ எப்போதும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடைய மென்மையை அனுபவித்தபடி உள்ளாய். இதனால் உன்னுடைய பத்மராகம், முத்து ஆகிய கற்களின் ஒளியால் அதிகமான துளிர்கள் மற்றும் மலர்கள் கொண்ட விரிப்பை ஏற்படுத்திகிறாய் போலும்.
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் எத்தனை மென்மையானது என்று பாதுகைக்கு மட்டுமே தெரியும். ஆகவே அவன் ஸஞ்சாரம் செய்யும்போது, அந்தத் திருவடிகள் நோகக்கூடாது என்று தனது ஒளி மூலம் மலர்படுக்கை அமைக்கிறாள். பத்மராகக்கற்களின் ஒளியானது, மிகவும் துளிர்களான சிவந்த இலைகள் போன்றும், முத்துக்களின் ஒளி அவற்றின் வெண்மையான மலர்கள் போன்றும் உள்ளன.