Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 565)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

பர்யந்த ஸங்கடித பாஸுர பத்மராகா: பத்ம உதர ப்ரமர காந்திமுஷ: த்வதீயா: த்வத் ஸம்ச்ரயேண சரணாவநி சக்ரநீலா: பீதாம்பரேண புருஷேண துலாம் லபந்தே

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைச் சுற்றிலும் சிவந்து ப்ரகாசிக்கின்ற பத்மராகக் கற்கள் இழைக்கப்பட்டுள்ளன. இதன் நடுவில், தாமரை மலரின் நடுவில் உள்ள வண்டுகளின் அழகு போன்ற இந்த்ரநீலக் கற்கள் உள்ளன. இதனைக் காணும்போது, பீதாம்பரம் உடுத்தியபடி நிற்கும் ஸ்ரீரங்கநாதனின் தோற்றம் போன்ற ஒற்றுமை உள்ளது.

இங்கு பத்மராகம் = தாமரை, நீலக்கற்கள் = வண்டு; பத்மராகம் = பீதாம்பரம், நீலக்கற்கள் = ஸ்ரீரங்கநாதன்.