Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 564)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

ஸூர்ய ஆத்மஜா ஹரி சிலாமணி பங்க்தி லக்ஷ்யாத் த்வாம் நித்யம் ஆச்ரிதவதீ மணிபாதரக்ஷே அதௌ ஜநார்தநபதே க்ஷணமாத்ர லக்நாம் ஆஸந்த மௌக்திக ருசா ஹஸதீவ கங்காம்

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! உன் இந்த்ரநீலக் கற்களின் வரிசையைக் காணும்போது, உன்னை எப்போதும் யமுனை அண்டியே உள்ளாள் என்பது போன்று இருக்கிறது. இந்த யமுனை, தொடக்கத்தில் மட்டும் ஒரு சில நொடிகளே எம்பெருமானின் திருவடித் தொடர்பு கொண்டுள்ள கங்கையைப் பார்த்து சிரிப்பது போன்று, உன்னுடைய முத்துக்களின் ஒளி உள்ளது.

த்ரிவிக்ரமனாக ஸ்ரீரங்கநாதன் நின்ற சிறிது காலம் மட்டுமே அவனுடைய திருவடித் தொடர்பு கங்கைக்கு உள்ளது. ஆனால் யமுனைக்கு எப்போதுமே கண்ணனின் தொடர்பு உள்ளது. ஆகவே, யமுனை கங்கையைப் பார்த்து ஏளனம் செய்வதாகக் கூறுகிறார்.