Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 563)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
பாஸா ஸ்வயா பகவதோ மணிபாதரக்ஷே முத்தாந்விநா மரதகோபல பத்ததி: தே நித்யாவகாஹந ஸஹம் ஸகலஸ்ய ஜந்தோ: கங்காந்விதம் ஜநயதீவ ஸமுத்ரம் அந்யம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! முத்துக்களுடன் சேர்ந்த உன் பச்சைக்கற்களின் வரிசையில் தோன்றும் ஒளி எப்படி உள்ளது என்றால் - அனைத்து மக்களும் அன்றாடம் வணங்கி நீராடத் தகுந்ததாக உள்ள கங்கையுடன் கூடிய ஸமுத்திரத்தை ஏற்படுத்துவது போன்று உள்ளது.
பச்சைக்கற்களின் ஒளியானது ஸமுத்திரத்தின் மேற்பரப்பு போன்று உள்ளது. முத்துக்களின் ஒளியானது கங்கைநதி அந்த ஸமுத்திரத்தில் கலப்பது போன்று உள்ளது. இந்த ஸமுத்திரம் ஏன் உருவாக்கப்பட்டது என்றால், மற்ற ஸமுத்திரங்களில் குறிப்பிட்ட காலங்களில் நீராடக்கூடாது என்ற விதி உள்ளது. இந்த விதி இல்லாமல் எப்போதும் நீராடலாம்படி இந்த ஸமுத்திரம் உள்ளது.