Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 562)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
விஷ்ணோ: பதேந கடிநா மணிபாதுகே த்வம் வ்யக்த இந்த்ரநீல ருசி: உஜ்ஜவல மௌக்திகச்ரீ: கலேஷு தீவ்யஸி மருத்பி: உதீர்யமாணா காதம்பிநீவ பரித: ஸ்ப்புட வாரிபிந்து:
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்னும் ஆகாயத்துடன் சேர்ந்தவளாகவும்; இந்த்ரநீலக் கற்களின் ஒளி பெற்று, அவற்றால் நீல நிறமாக உள்ளவளாகவும், முத்துக்களின் வெண்மையான ஒளி மூலம் மழைத்துளி என்னும் அழகு சேர்க்கப்பட்டவளாகவும்; அந்தந்த காலங்களில் தேவர்கள் என்னும் காற்று மூலம் துதிக்கப்பட்டவளாகவும் நீ உள்ளாய். இப்படியாக நான்கு நிலைகளிலும் காணப்படும் நீர் கொண்ட மேகங்களின் வரிசை போன்று நீ உள்ளாய்.