Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 561)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

உத்கீர்ண காட தமஸ: ஹரி நீலபங்கா: தாராவிசேஷ ருசிராணி ச மௌக்திகாநி த்வத் ஸங்கமாத் ஸரஸிஜேக்ஷண பாதரக்ஷே ஸம்யோஜயந்தி நிசயா பவ மௌளி சந்த்ரம்

சிவந்த தாமரை மலர் போன்ற கண்கள் கொண்ட நம்பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னில் காணப்படும் இந்த்ரநீலக் கற்கள் பெரும் இருளுடன் கூடிய மேகங்கள் போன்று உள்ளன. முத்துக்கள் அனைத்தும் நக்ஷத்ரங்கள் போன்று அழகாக உள்ளன. இப்படியாக இவை இரண்டும் உன்னுடைய தொடர்பு மூலமாக சிவனின் தலையில் உள்ள சந்திரனை உன்னுடன் சேர்க்கின்றன.