Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 560)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

முக்தா இந்த்ரநீல மணிபி: விஹிதே பவத்யா: பங்க்தீ த்ருடே பரமபூருஷ பாதரக்ஷே: மந்யே ஸமாச்ரித ஜநஸ்ய தவ அநுபாவாத் உந்மோசிதே ஸுக்ருத துஷ்க்ருத ச்ருங்கலே த்வே

பரமபுருஷனாகிய ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னை ஆராதிக்கும் அடியவர்களின் புண்ணியம் மற்றும் பாவம் என்ற இரண்டு சங்கலிகளும் கழற்றப்படுகின்றன. இந்தச் சங்கிலிகளே உன்னில் அமைக்கப்பட்ட முத்துக்கள் மற்றும் இந்த்ரநீலக் கற்களின் வரிசைகள் என்று நான் எண்ணுகிறேன்.