Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 559)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
ஆஸந்ந வாஸவசிலா ருசிரா: த்வதீயா: பத்மேக்ஷணஸ்ய பதரக்ஷிணி பத்மராகா: ஸம்பாவயந்தி ஸமயே க்வசித் உஷ்ண பாநோ: ஸத்ய: ப்ரஸூத யமுநா ஸுபகாம் அவஸ்த்தாம்
தாமரை போன்ற நீண்ட கண்கள் கொண்ட பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஊனில் பதிக்கப்பட்ட இந்த்ரநீலக் கற்களின் அருகில், சிவந்த பத்மராகக்கற்கள் உள்ளன. இது எப்படி உள்ளது என்றால் - அப்போதுதான் பிறந்த யமுனை நதியால் அழகு பெற்ற சூரியனின் தோற்றத்தை மனதில் உண்டாக்குகிறது.