Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 558)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

ஆகீர்ண மௌக்திக ஹரிந் மணிபத்மராகம் அம்போஜ லோசந பதாவநி பாவயே த்வம் தத்பாத விச்ரமஜுஷாம் ச்ருதி ஸுந்தரீணாம் வர்ண உபதாநம் இவ மௌளி நிவேச யோக்யம்

தாமரை போன்ற அழகான கண்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் இளைப்பாறியபடி வேதங்கள் உள்ளன. இவை அழகான பெண்கள் போன்று உள்ளன். இவை தங்கள் தலைகளுக்கு வைத்துக் கொள்வதற்காக வர்ணம் நிறைந்த தலையணைகளை - உனது முத்துக்கள், பச்சைக்கற்கள், சிவப்புக்கற்கள் கொண்டு நீ அமைப்பதாக நான் எண்ணுகிறேன்.