Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 557)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
தேஹத்யுதிம் ப்ரகடயந்தி மஹேந்த்ரநீலா: சௌரே: பதாம்புஜ ருசிம் தவ பத்மராகா: அந்யோந்ய லப்த பரமாகதயா து அமீஷாம் ஆபாதி காந்தி: அபரா மணிபாதரக்ஷே
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இந்திரநீல இரத்தினங்கள் ஸ்ரீரங்கநாதனின் அழகான திருமேனியின் ஒளியைப் போன்று உள்ளன. பத்மராகக் கற்கள் அவனது சிவந்த அழகான திருவடித் தாமரைகளின் ஒளியை உணர்த்துவதாக உள்ளன. இப்படியாக இந்தக் கற்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, மற்றொரு விதமான ஒளியை வீசுவதாக உள்ளன.