Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 556)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

தாபத்ரய ப்ரசமநாய ஸமாச்ரிதாநாம் ஸந்தர்சித ஆருண ஸிதாஸிரத்ந பங்க்தி: புஷ்ணாஸி ரங்கந்ருபதே: மணிபாதுகே த்வம் ப்ராய: ஸரோஜ குமுத உத்பவ காநநாநி

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் இருக்கின்ற இரத்தினக்கற்கள் சிவப்பு, வெண்மை மற்றும் கருநீலம் ஆகிய வர்ணங்களின் ஒளியை வீசியபடி உள்ளன. இதனைக் காணும்போது ஸ்ரீரங்கநாதனை அண்டியவர்களின் துன்பங்களை நீக்க நீ தாமரை, அல்லி மற்றும் நெய்தல் மலர்கள் நிறந்த காடுகளை உண்டாக்குவது போன்று உள்ளது.