Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 555)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

அந்யோந்ய பந்துர ஹரிந்மணி பத்மராகா ரங்கேச்வரஸ்ய சரணாவநி ராஜஸே த்வம் ஆத்ம உபமாந விபவாத் சரிதார்த்தயந்தீ சைலாத்மஜா கிரிசயோ: இவ மூர்த்திம் ஏகாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் இருக்கும் பச்சை மற்றும் சிவப்பு இரத்தினங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டுள்ளன. இதனைக் காணும்போது, ஹிமவத் என்ற பர்வதத்தின் பெண்ணாகிய பார்வதியும் சிவனும் ஒன்றாக உள்ள நிலையை நீ வெளிப்படுத்துகிறாய் என்று தோன்றுகிறது. இதன் மூலம், அந்த உருவத்திற்கு மேன்மை உண்டாக்குகிறாய் போலும்.