Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 553)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

ரங்கேச்வரஸ்ய ம்ருகயோ: சரணாவஸக்தாம் ரக்ஷ: கபீந்த்ர மகுடேஷு நிவேச யோக்யாம் மந்யே பதாவநி நிபத்த விசித்ர ரத்நாம் மாயாம்ருகஸ்ய ரசிதாம் இவ சர்மணா த்வாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மாரீசனை வேட்டை ஆடிய ஸ்ரீரங்கநாதனின் திருவடியிலும் நீ உள்ளாய்; அரக்கர்களின் தலைவன் விபீஷணன், குரங்குகளின் தலைவன் சுக்ரீவன் ஆகியவர்களின் தலைகளிலும் நீ உள்ளாய். பலவிதமான இரத்தினங்கள் கொண்டு இழைக்கப்பட்ட உன்னைக் காணும்போது, மாரீசன் என்னும் மாயமானின் தோலால் செய்யப்பட்டவளோ என்று நான் நினைக்கிறேன்.