Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 552)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

அந்த: புராணி ஸம்யேஷு அபிகந்து மேகா ரங்கேசிது: ஜ்ஞபயஸீவ பதாவநி த்வம் முக்தா அம்சுஜால மிளநாத் ருசிரை: ப்ரவாளை: பிம்பாதரம் ஸ்மிதவிசேஷயுதம் ப்ரியாணாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடன் நீ சில நேரங்களில் தனித்து இருக்கிறாய். அப்போது உன்னில் பதிக்கப்பட முத்துக்களின் ஒளியுடன் கூடிய பவழங்கள் மிகவும் அழகாகத் தோற்றம் அளிக்கின்றன. இவை ஸ்ரீரங்கநாச்சியாரின் புன்னகையுடன் கூடிய கோவைப்பழம் போன்ற உதடுகளை ஸ்ரீரங்கநாதனுக்கு நினைவுபடுத்துவது போன்று உள்ளது.