Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 551)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
ஆஸக்த வாஸவசிலா சகலா: த்வதீயா: பத்மா ஸஹாய பதரக்ஷிணி பத்மராகா: ப்ரத்யக்ஷயந்தி கமபி ப்ரமர ஆபிலீநம் பாதாரவிந்த மகரந்த ரஸப்ரவாஹம்
தாமரையில் அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாச்சியாரை விட்டுப் பிரியாத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! இந்த்ரநீலக் கற்களின் துணுக்குகள் கொண்ட சிவந்த பத்மராகக்கற்கள், ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில் வண்டுகள் போன்று காணப்படுகின்றன. இதனைக் காணும்போது அவனது திருவடிகளில் தேன் பெருகி நிற்பதைக் உணர முடிகிறது.