Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 550)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

ரங்காதிராஜ பதரக்ஷிணி ராஜதே தே வஜ்ர உபஸங்கடித மௌக்திக வித்ருமஸ்ரீ: ஸக்தா சிரம் மநஸி ஸம்யமிநாம் நிவாஸாத் ஸூர்ய இந்து அஹ்நிமய மண்டல வாஸநேவ

ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! வைரத்துடன் சேர்த்துப் பதிக்கப்பட்ட முத்து, பவழம் ஆகியவற்றின் ஒளியானது - நீண்டகாலமாக யோகிகளின் மனதில் நீ இருந்து வருவதால், அங்குள்ள சூரியன், சந்திரன், அக்னி மண்டலங்களின் வாசனையுடன் கூடியதாக உன்னில் காணப்படுகிறது.

யோகிகள் த்யானம் செய்யும்போது சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்னி மண்டலம் என்பவற்றை த்யானித்து, அதன் நடுவில் பாதுகையுடன் கூடிய ஸ்ரீரங்கநாதனை த்யானிப்பார்கள். ஆக அந்த மண்டலங்களின் தன்மைகள் பாதுகையில் காணப்படுகின்றன என்று கருத்து.