Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 549)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

காருத்மத அந்தரித மௌக்திக பங்க்தி லக்ஷ்யாந் தூர்வா மதூக ரசிதம் துரிதோபசாந்த்யை மாத: ஸ்வயம் வஹஸி முக்த்ததியாம் ப்ரஜாநாம் மங்கள்யமால்யம் இவ மாதவ பாதுகே த்வம்

ஸ்ரீரங்கநாச்சியாரைத் தரித்தவனான ஸ்ரீரங்கநானின் பாதுகையே! தாயே! உன்னிடத்தில் பதிக்கப்பட்ட இரத்தினங்களில் பச்சை இரத்தினங்களும், முத்துக்களும் வரிசையாக உள்ளன. இதனைக் காணும்போது – இந்த உலகில் உள்ளவர்களுடைய பாவம் நீங்குவதற்காக, அருகம்புல் மற்றும் இலுப்பைமலர் கொண்டு கட்டப்பட்ட மாலையை, அவர்களுக்காக நீயே அணிந்துள்ளதாகத் தோன்றுகிறது.