Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 548)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

ரத்நைர் வ்யவஸ்தித ஸித அஸித சோணை வர்ணை: ஆலோகவத்பி: அஜஹத் ச்ருதி ஸந்நிகர்ஷை: த்ரஷ்டும் முகுந்த சரணௌ அநிமேஷ த்ருச்யௌ ஸந்த்ருச்யஸே ஜநநி ஸம்ப்ருத நேத்ர பங்க்தி:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! உன்னில் உள்ள இரத்தினங்கள் வெண்மை, கறுப்பு, சிவப்பு என்று பலவிதமான நிறங்கள் கொண்டுள்ளன; பலவிதமான ஒளியை உடையதாக உள்ளன; வேதங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாக உள்ளன (அதாவது காதுவரை நீண்டதாக உள்ளன); இப்படியாக இவற்றைக் காணும்போது, உனது பல வரிசையில் அமந்துள்ள கண்கள் போன்று அவை உள்ளன. இப்படியாக உள்ள கண்கள் மூலம் நீ ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை இமைக்காமல் பார்த்தபடி உள்ளாய்.