Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 547)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

ஆதந்வதீம் அஸுரமர்தந பாதரக்ஷே சுத்தாந்தபக்ஷ்மள த்ருசாம் மதந இந்த்ர ஜாலம் வைஹாரிகீம் விவித ரத்ந மயூக லக்ஷ்யாத் மந்யே ஸமுத்வஹஸி மோஹந பிஞ்சிகாம் த்வம்

அசுரர்களுக்கு விரோதியாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட பலவிதமான இரத்தினக்கற்களில் இருந்து, பல வர்ணங்கள் கொண்ட ஒளியின் சேர்க்கை ஏற்படுகிறது. இதனைக் காணும்போது நீ மயில்தோகை ஒன்றை வைத்திருப்பது போல் உள்ளது. இந்த மயில் தோகையானது, அந்தப்புரத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதனின் நாயகிகளுக்கு காமத்தை ஏற்படுத்தி, இப்படியாக இந்த்ரஜாலம் செய்யும் விளையாட்டுக் கருவியாகவே உள்ளது.