Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 546)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
ஸம்பித்யமாந மணிவித்ரும மௌக்திக ஸ்ரீ: ஸைரந்த்ரிகேவ பவதீ மணிபாதரக்ஷே ப்ரஸ்தௌதி ரங்கந்ருபதே: சரணாரவிந்தே கஸ்தூரிகா குஸ்ருண சந்தன பங்க சர்ச்சாம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட கற்களில் இந்த்ரநீலம், பவளம், முத்து ஆகியவை சிறப்பாக, ஒன்றுடன் ஒன்று கலந்தபடி ஒளி வீசுகின்றன. இதனைக் காணும்போது, ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளில் கஸ்தூரி, குங்குமப்பூ, சந்தனம் ஆகியவை கலந்த குழம்புப் பூச்சைப் பூசுகின்ற அலங்கார பணிப்பெண் போன்று நீ உள்ளாய்.