Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 545)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
சோணாச்மநாம் தவ ஹரிந்மணி ரச்மி பிந்நம் பாலாதபம் பலிவிமர்தந பாதரக்ஷே ச்யாமீக்ருதம் சுகசகுந்த கணப்ரவேசாத் சங்கே ஸதாம் கிமபி சாலி வநம் விபக்வம்
மஹாபலியை அடக்கிய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய சிவப்புக் கற்களின் ஒளியில், பச்சைக் கற்களின் ஒளியானது கலந்து நிற்கிறது. இதனைக் காணும்போது, இளம் வெயில் சூழ்ந்துள்ள சிறந்த நெற் பயிர்கள் கொண்ட வயல் ஒன்று பச்சைக்கிளிகள் புகுந்ததால் எங்கும், மேலும் பசுமையாகக் காட்சி அளிப்பதாக உள்ளது.