Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 544)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

ப்ரஸேதுஷீ கோத்ரபித: ப்ரணாமை: புஷ்ணாஸி ரங்கேச்வர பாதுகே த்வம் மணிப்ரபா ஸம்வலந உபதேசாத் ப்ராயஸ் ததர்ஹாணி சராஸநாநி

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மலைகளைப் பிளந்தவனான இந்திரன் உன்னை வணங்குகிறான். இந்த நமஸ்காரம் கண்டு நீ மகிழ்ந்து, உன்னுடைய பலவிதமான இரத்தினங்களுடைய ஒளியின் சேர்க்கை மூலம் இந்த்ரனுக்கு ஏற்ற வில்லை உண்டாக்குகிறாய் போலும்.