Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 543)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

விசித்ர வர்ணாம் மணிபாதுகே த்வாம் சந்தோமயீம் ஸாம நிபத்த கீதிம் முநீந்த்ர ஜுஷ்டாம் த்விபதாம் முராரே: ப்ரத்யாயிகாம் காஞ்சித் ருசம் ப்ரதீம:

இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உனது இரத்தினங்களின் பலவிதமான நிறங்களைக் காணும்போது அக்ஷரங்கள் (எழுத்துக்கள்) போன்று உள்ளன. இவை மூலம் நீ வேதமயமாகவே உள்ளாய். உன்னைக் கண்டவுடன் மக்கள் அனைவரும், ”எங்கள் குற்றங்களைப் பொறுப்பாய்”, என்று பாடுகின்றனர். இப்படியாக நீ முனிவர்களால் வணங்கப்பட்டும், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்து, அவனை உணர்த்துபவளாகவும் உள்ளாய். இப்படியாக உள்ள உன்னை ரிக் மந்த்ரம் என்றே கொள்கிறோம்.