Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 542)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

முக்தா மயூக ப்ரகரை: ஸுபத்ரா க்ருஷ்ணா மஹோந்த்ரோபல ரச்மிஜாலை: மாந்யா முராரேர் மணிபாதுகே த்வம் விஹார யுக்தா விஜயம் வ்ருணோஷி

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளியால் வெண்மையாக உள்ள நீ, கண்ணனின் தங்கையான சுபத்ரை போன்று உள்ளாய். இந்த்ரநீலக் கற்களின் ஒளியால் கருமையான திரௌபதி போன்று உள்ளாய். இப்படியாக நீ முரன் என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனுக்கு ப்ரியமானவளாக உள்ளாய். எங்கு சென்றாலும் வெற்றியுடன் உள்ள நீ, அர்ஜுனனைத் திருமணம் செய்து கொண்டாய் போலும்.