Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 541)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

பதஸ்ய கோப்த்ரீ பவதீ முராரே: மணிஸ்ப்ருசா மௌக்திக ரத்நபாஸா அந்தர் த்ருசம் ஸாஞ்சநயா முநீநாம் அநக்தி கர்ப்பூர சலாகயேவ

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் நீ, உன்னுடைய இந்திரநீலக் கல்லைத் தொடுகின்ற முத்தின் ஒளி என்னும் மையுடன் சேர்ந்த குச்சி கொண்டு, முனிவர்களின் ஞானக் கண்களுக்கு மை தீட்டுகிறாய் போலும்.

முத்தின் வெண்மையான ஒளியானது நீலக்கற்களின் மீது விழுகிறது. அப்போது அதனைக் காண்பதற்கு, நுனியில் மை தடவப்பட்ட குச்சி போன்று தோற்றம் அளிக்கிறது. இந்த மையை முனிவர்களின் ஞானக்கண்களில் தீட்டி, அவர்கள் ஸ்ரீரங்கநாதனைக் காண உதவுவதாகக் கூறுகிறார்.