Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 540)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
அவைமி ரங்கேச்வர பாதுகாப்யாம் அகால கால்யம் விபவம் விதாதும் வஜ்ரேந்த்ர நீல வ்யபதேச த்ருச்யம் பந்தீக்ருதம் நூநம் அஹஸ்த்ரியாமம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் வஜ்ஜிரக்கல் என்றும், இந்திர நீலக்கல் என்றும் இருவிதமான இரத்தினங்கள் உள்ளன. இவை பகல் போன்றும், இரவு போன்றும் தோன்றுகின்றன. இதனைக் காணும்போது, மோக்ஷம் என்னும் தடை இல்லாத ஐச்வர்யத்தை, எங்களைப் போன்றவர்களுக்கு இரவுபகல் பாராமல் அளிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு, இவை உன்னில் சிறை வைக்கப்பட்டதாகவே நான் எண்ணுகிறேன்.