Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 539)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

தமால நீல த்யுதிம் இந்த்ர நீலை: முக்த அநுவித்தாம் மணிபாதுகே த்வாம் அவைமி ரங்கேச்வர காந்தி ஸிந்தோ: வேலாம் அவிச்ராந்த கதா கதார்ஹம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இரத்தினக்கற்களின் நீல நிறமான ஒளி காரணமாக, தமால மரம் போன்று உள்ளாய். ஸ்ரீரங்கநாதனின் திருமேனியில் இருந்து வெளிவரும் ஒளியாகிய கடல் அலைகளை வரவேற்கின்ற கரை போன்று நீ உள்ளாய். அந்தக் கரையில் காணப்படும் முத்துச்சிப்பிகள் போன்று உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்கள் உள்ளன.

கடலின் கரையில் அடர்ந்த பச்சை நிறத்தில் இலைகள் கொண்ட தமால மரங்கள் உள்ளதால், அங்கு நீலநிறமாகக் காணப்படும். அந்தக் கரையில், அலைகளால் இழுத்து வரப்பட்ட முத்துச்சிப்பிகள் மற்றும் முத்துக்கள் காணப்படும். இந்தக் கடலில் இடைவிடாமல் வீசும் அலையாக, ஸ்ரீரங்கநாதனின் திருமேனியில் இருந்து வெளிவரும் ஒளியைக் கூறுகிறார்.