Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 538)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
ப்ருதக் விதாநாம் த்யுதிபி: மணீநாம் த்வாம் பாதுகே லோஹித சுக்ல க்ருஷ்ணாம் விஹரஹேதோ: இஹ ரங்கபர்த்து: பாத அநுஷக்தாம் ப்ரக்ருதிம் ப்ரதீம:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பலவிதமான இரத்தினக்கற்களின் ஒளி காரணமாக சிவப்பு, வெண்மை, கறுப்பு ஆகிய நிறங்களை நீ வெளிப்படுத்துகிறாய். இப்படியாக உன்னைக் காணும்போது, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை வந்தடைந்த ப்ரக்ருதி போன்று உள்ளாய்.
உலகில் உள்ள பலவிதமான பொருள்களுக்கும் மூல காரணமாக உள்ள ஜடப்பொருளை மூலப்ரக்ருதி என்றும், ப்ரக்ருதி என்றும் கூறுவர். இதற்கு ரஜஸ், தமஸ் மற்றும் ஸத்வம் ஆகிய குணங்கள் உண்டு. ஸத்வம் வெண்மையாகவும், தமஸ் கறுப்பாகவும், ரஜஸ் சிவப்பாகவும் கூறப்படும். ஆக இந்த மூன்றும், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ள பாதுகையில் இருந்து வெளிபடும் நிறங்களால் உண்டாவதாகக் கூறுகிறார்.