Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 537)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

தவ மாதவ பாதுகே மணீநாம் ப்ரபயா தேவி ஸித ஆஸித ஆருணாநாம் வஹதே கிரிசஸ்ய மௌளிகங்கா குமுத இந்தீவர பத்ம காநநாநி

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாச்சியாரைத் தரித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய வெண்மை, கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய இரத்தினக்கற்களின் ஒளி காரணமாக, சிவனின் தலையில் உள்ள கங்கையானது ஆம்பல், கருநெய்தல் மற்றும் செந்தாமரை போன்ற மலர்கள் நிறைந்த காடுகளை அடைகிறது போலும் (பாதுகையை சிவன் தனது தலையில் ஏற்பதால், அந்த நிறங்கள் சிவனின் தலையில் மலர்கள் போன்று காணப்படுகின்றன என்றார்).