Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 536)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
ப்ரபயா ஹரி நீல மௌக்திகாநாம் விகஸந்த்யா திசஸீவ பாதுகே த்வம் மதுபித் சரணாரவிந்த லக்ஷ்ம்யா: ஸ்ரஜம் இந்தீவர புண்டரீக பத்தாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மஹாலக்ஷ்மி போன்று உள்ளன. உன்னில் பரவுகின்ற இந்திரநீலக் கற்கள், முத்துக்கள் ஆகியவற்றின் ஒளி மூலமாக, இந்த மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கருநெய்தல் மற்றும் செந்தாமரை ஆகிய மலர்கள் கொண்டு நீ மாலை தொடுக்கிறாய் போலும்.