Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 535)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

பஹு ரத்ந ஸமுத்பவம் மயூகம் தவ மந்யே மணிபாதுகே முராரே: சரண உபகதம் மயூரபிஞ்சம் மகுட ஆரோஹண ஸாஹஸம் ப்ரமார்ஷ்டும்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! பலவிதமான இரத்தினக்கற்களின் ஒளியால், பல வர்ணங்களில் நீ காணப்படுகிறாய். உன்னைக் காணும்போது- முன்பு கண்ணனின் தலையில் அமர்ந்த மயில் பீலியானது, அந்தச் செயலுக்காக மன்னிப்புக் கேட்டு, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் விழுந்து கிடப்பது போன்று உள்ளது (பாதுகையை மயில் பீலியாகக் கூறுகிறார்).