Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 534)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

ஸஹஸா விநிவேத்ய ஸாபராதாந் த்வத் ஆதீந ஸ்வபதே முகுந்த பாதே அருணோபல ஸக்த மௌக்திக ஸ்ரீ: ஸ்மயமாநேவ விபாஸி பாதுகே த்வம்

ஸ்ரீரங்ககநாதனின் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட சிவப்புக் கற்களின் மீது முத்துக்களின் வெண்மையாக ஒளியானது பரவியபடி உள்ளது. இது எப்படி உள்ளது என்றால் – உனக்கு வசப்பட்டு உன் விருப்பத்தின்படி நடக்கின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில், குற்றங்கள் பல செய்தவர்களை வெகுவேகமாகக் கொண்டு சேர்த்து, மகிழ்ந்து புன்னகை வீசுவது போன்று உள்ளது.