Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 533)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
நவரத்ந விசித்ரிதா முராரே: பதயோ: த்வம் மணிபாதுகே விபாஸி நவகண்டவதீ வஸுந்தரேவ ப்ரணயாத் ஜந்மபுவம் ஸமாச்ரயந்தீ
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட ஒன்பது விதமான இரத்தினக்கற்கள், பலவிதமான வர்ணங்களுடன் கூடியதாக ஒளிர்ந்தபடி நீ உள்ளாய். இப்படியாக நீ, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்னும் பிறப்பிடத்தை அடைத்துள்ள, ஒன்பது கண்டங்களுடன் கூடிய பூமி போன்று உள்ளாய்.
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் இருந்து பூமி வெளிப்பட்டது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்தப் பூமியில் பாரத, கிம்புருஷ, ஹரிவர்ஷ, இளாவ்ருத, பத்ராச்வ, கேதுமால, ரம்ய, ஹிரண்மய மற்றும் குரு என்னும் ஒன்பது கண்டங்கள் உள்ளன. இது போன்று பாதுகையில் முத்து, சிவப்பு, பச்சை, நீலம், வைடூரியம், கோமேதகம், வைரம், பவழம் மற்றும் தங்கம் ஆகிய ஒன்பது விதமான நிறங்கள் உள்ளன. இதனால் ஒற்றுமை கூறுகிறார்.