Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 532)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

மணிபி: ஸித ரக்த பீத க்ருஷ்ணை: பவதீ காஞ்சந பாதுகே விசித்ரா யுகபேத விகல்பிதம் முராரே: யுகபத் தர்சயதீவ வர்ணபேதம்

தங்கமயமான பாதுகையே! வெண்மை, சிவப்பு, மஞ்சள், கறுப்பு ஆகிய பலவிதமான இரத்தினக்கற்களின் நிறம் மூலமாக, ஸ்ரீரங்கநாதன் பல்வேறு யுகங்களில் நிற்கும் நிற வேற்றுமையை ஒரே நேரத்தில் நீ காண்பிக்கிறாய் போலும்.

எம்பெருமான் க்ருதயுகத்தில் வெண்மையாகவும், த்ரேதாயுகத்தில் சிவப்பாகவும், த்வாபரயுகத்தில் மஞ்சளாகவும், கலியுகத்தில் கறுப்பாகவும் உள்ளதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவை அனைத்தையும் ஒன்றாகப் பாதுகை காண்பிக்கிறது.