Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 529)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

மஹார்க்கை: ஆச்லிஷ்டாம் மணிபிரவதூத த்யுமணிபி: கதம் சித் க்ஷேத்ரஜ்ஞை: அதிகதபதாம் அம்ப! பவதீம் முகுந்தேந த்ராதும் பத கமல மூலே விநிஹிதாம் நிராபாதாம் மந்யே நிதிம் அநக வாசாம் நிரவதிம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! மிகவும் விலை உயர்ந்ததாகவும், சூரியனையும் தாழச்செய்கின்ற ஒளியுடன் கூடிய இரத்தினக்கற்களைக் கொண்டதாகவும், பெருமை அறிந்தவர்களால் மிகவும் கடினத்துடன் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், இதனைப் பாதுகாப்பதற்காகவே ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளில் வைக்கப்பட்டதாகவும் உள்ள நிதி போன்று நீ உள்ளாய். மற்றவர்களால் எளிதில் கவர இயலாத நிதியாக உள்ள உன்னை, வேதவாக்குகள் என்கிற நிதியாகவே எண்ணுகிறேன்.