Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 528)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
ஸலீலம் விந்யஸ்ய த்வயி சரணரக்ஷே நிஜபதம் யத்ருச்சா நிஷ்க்ராந்தே விஹரதி ஹரௌ ரங்கரஸிகே திசா ஸௌதாந் அஷ்டௌ ஜநயஸி ததா நிர்ப்பரமிளந் மணிச்சாயா மாயா கந கடித கேது வ்யதிகராந்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! ஸ்ரீரங்கத்தில் எப்போதும் வசிப்பதை இன்பமாக எண்ணும் ஸ்ரீரங்கநாதன், உன் மீது தனது திருவடிகளை வைத்தபடி ஸஞ்சாரம் செய்வதை உல்லாசமாகவே செய்கிறான். சில நேரங்களில் திடீரென்று உன்னைச் சாற்றிக்கொண்டு நம்பெருமாள் வெளியில் வரும்போது, உன்னுடைய இரத்தினக்கற்களின் ஒளியானது எட்டுத் திசைகளிலும் உள்ள மாட மாளிகைகளில் பரவி நிற்கிறது. இப்படி நெருக்கமாக உள்ள அந்த ஒளி வெள்ளத்தைக் காணும்போது, நம்பெருமாள் எழுந்தருளும் நேரத்தில் கட்டப்படும் கொடிகள் போன்று தோன்றுகிறது.